95. கண்ணால் ஆளும் கண்ணாளன்.

आदौ हैरण्यगर्भीं तनुमविकलजीवात्मिकामास्थितस्त्वं
जीवत्वं प्राप्य मायागुणगणखचितो वर्तसे विश्वयोने ।
तत्रोद्वृद्धेन सत्त्वेन तु गुणयुगलं भक्तिभावं गतेन
छित्वा सत्त्वं च हित्वा पुनरनुपहितो वर्तिताहे त्वमेव ॥१॥

aadau hairaNyagarbhiiM tanumavikala jiivaatmikaamaasthitastvaM
jiivatvaM praapya maayaaguNagaNakhachitO vartase vishvayOne |
tatrOdvR^iddhena sattvena tu guNayugalaM bhaktibhaavaM gatena
Chittvaa sattvaM cha hitvaa punaranupahitO vartitaahe tvameva || 1

ஆதௌ³ ஹைரண்யக³ர்பீ⁴ம் தனுமவிகலஜீவாத்மிகாமாஸ்தி²தஸ்த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயாகு³ணக³ணக²சிதோ வர்தஸே விஶ்வயோனே |
தத்ரோத்³வ்ருத்³தே⁴ன ஸத்த்வேன து க³ணயுக³லம் ப⁴க்திபா⁴வம் க³தேன
சி²த்வா ஸத்த்வம் ச ஹித்வா புனரனுபஹிதோ வர்திதாஹே த்வமேவ || 95-1 ||

எங்கும் ஜலமயம். இருள். பகவான் ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச சிருஷ்டியை சங்கல்பித்தான். எல்லாம் அவனே. அவனிலிருந்து தான் சகலமும் ஆரம்பம். ஹிரண்யகர்பனாக ஸர்வ மூலாதாரனாகி ஒன்று பலவாகி ஜீவர்கள் தோன்றினர். எதிலும் மாயையின் பிணைப்பு. முக்குணங்கள் ஆளுமை செலுத்தின. ஸத்வம் மற்ற குணங்களை வென்று முடிவில் நிர்குணமாக உன்னையே சரணடைய வழி வகுத்தாய். நானும் அப்படி உருவானவன். பற்றற்று முடிவில் உன்னையே சேர முயல்பவன்.

सत्त्वोन्मेषात् कदाचित् खलु विषयरसे दोषबोधेऽपि भूमन्
भूयोऽप्येषु प्रवृत्तिस्सतमसि रजसि प्रोद्धते दुर्निवारा ।
चित्तं तावद्गुणाश्च ग्रथितमिह मिथस्तानि सर्वाणि रोद्धुं
तुर्ये त्वय्येकभक्तिश्शरणमिति भवान् हंसरूपी न्यगादीत् ॥२॥

sattvOnmeShaat kadaachit khalu viShayarase dOShabOdhepi bhuuman
bhuuyO(a)pyeShu pravR^ittiH satamasi rajasi prOddhate durnivaaraa |
chittaM taavat guNaashcha grathitamiha mithastaani sarvaaNi rOddhuM
turye tvayyekabhaktiH sharaNamiti bhavaan hamsaruupii nyagaadiit || 2

ஸத்த்வோன்மேஷாத்கதா³சித்க²லு விஷயரஸே தோ³ஷபோ³தே⁴(அ)பி பூ⁴மன்
பூ⁴யோ(அ)ப்யேஷு ப்ரவ்ருத்தி꞉ ஸதமஸி ரஜஸி ப்ரோத்³த⁴தே து³ர்னிவாரா |
சித்தம் தாவத்³கு³ணாஶ்ச க்³ரதி²தமிஹ மித²ஸ்தானி ஸர்வாணி ரோத்³து⁴ம்
துர்யே த்வய்யேகப⁴க்தி꞉ ஶரணமிதி ப⁴வான்ஹம்ஸரூபீ ந்யகா³தீ³த் || 95-2 ||

நாராயணா, எங்கும் எதிலும் நிறைந்த பரப்ரம்மமே, முக்குணங்களில் ஸத்வம் ப்ரதானமாகி விட்டால் மற்ற குணங்கள், ஐம்புலன்கள் விளைவிக்கும் தீங்குகள் புரியும். விலகிக் கொள்ள முடியும். மற்ற ரெண்டும், ரஜோ, தமோகுணங்கள் மேலீட்டால், முன்னேற வழியேது? மனமும் குணமும் ஒன்று சேர்ந்தால் நாசம் அடைய வேறு என்ன வேண்டும்? நீ சகலமும் கடந்த துரீயன். பரமஹம்சன் . உன்னை சரணடைந்தால், மீளலாம் என உபதேசித்தவன்.

सन्ति श्रेयांसि भूयांस्यपि रुचिभिदया कर्मिणां निर्मितानि
क्षुद्रानन्दाश्च सान्ता बहुविधगतय: कृष्ण तेभ्यो भवेयु: ।
त्वं चाचख्याथ सख्ये ननु महिततमां श्रेयसां भक्तिमेकां
त्वद्भक्त्यानन्दतुल्य: खलु विषयजुषां सम्मद: केन वा स्यात् ॥३॥

santi shreyaamsi bhuuyaamsyapi ruchibhidayaa karmiNaaM nirmitaani
kshudraanandaashcha saantaa bahuvidhagatayaH kR^iShNa tebhyO bhaveyuH |
tvaM chaachakhyaatha sakhye nanu mahitatamaaM shreyasaaM bhaktimekaaM
tvadbhaktyaananda tulyaH khalu viShaya juShaaM sammadaH kena vaa syaat || 3

ஸந்தி ஶ்ரேயாம்ஸி பூ⁴யாம்ஸ்யபி ருசிபி⁴த³யா கர்மிணாம் நிர்மிதானி
க்ஷுத்³ரானந்தா³ஶ்ச ஸாந்தா ப³ஹுவித⁴க³தய꞉ க்ருஷ்ண தேப்⁴யோ ப⁴வேயு꞉ |
த்வஞ்சாசக்²யாத² ஸக்²யே நனு மஹிததமாம் ஶ்ரேயஸாம் ப⁴க்திமேகாம்
த்வத்³ப⁴க்த்யானந்த³துல்ய꞉ க²லு விஷயஜுஷாம் ஸம்மத³꞉ கேன வா ஸ்யாத் || 95-3 ||

கிருஷ்ணா , மாயாஜாலா, அப்பப்பா, எத்தனையோ பாதைகளைக் காட்டியிருக்கிறாய். எது எங்கே செல்லும் என்று அறிவுறுத்தியிருக்கிறாய். எது அநித்தியம், எது உலகியல் , துன்பங்களை இன்பம் போல் காட்டும் என்றும் உணர்த்தியிருக்கிறாய். உன் சிஷ்யன், பக்தன், உத்தவனுக்கு உபதேசித்து அதன் மூலம் அர்ஜுனனுக்கு சொன்னதன் தொடர்ச்சியையும் அளித்தாய். சரியான வழியை காட்டினாய். பக்தி மூலம் பரந்தாமா, உன்னை எளிதில் அடைய அருளினாய். உனது நாம சங்கீர்த்தனம் தரும் சுகமே தனி. கலியுகத்துக்கென்றே பிரத்யேகமாக நீ தந்த வரப்பிரசாதம் அது. (உத்தவ கீதை அற்புதமானது. அடுத்து அதை அறிவோம்.)

त्वत्भक्त्या तुष्टबुद्धे: सुखमिह चरतो विच्युताशस्य चाशा:
सर्वा: स्यु: सौख्यमय्य: सलिलकुहरगस्येव तोयैकमय्य: ।
सोऽयं खल्विन्द्रलोकं कमलजभवनं योगसिद्धीश्च हृद्या:
नाकाङ्क्षत्येतदास्तां स्वयमनुपतिते मोक्षसौख्येऽप्यनीह: ॥४॥

tvadbhaktyaa tuShTabudbeH sukhamihacharatO vichyutaashasya chaashaaH
sarvaaH syuH saukhyamayyaH salilakuharagasyeva tOyaikamayyaH |
sO(a)yaM khalvindralOkaM kamalajabhavanaM yOgasiddhiishcha hR^idyaaH
naakaankshatyetadaastaaM svayamanupatite mOkshasaukhye(a)pyaniihaH ||4

த்வத்³ப⁴க்த்யா துஷ்டபு³த்³தே⁴꞉ ஸுக²மிஹ சரதோ விச்யுதாஶஸ்ய சாஶா꞉
ஸர்வாஸ்ஸ்யு꞉ ஸௌக்²யமய்ய꞉ ஸலிலகுஹரக³ஸ்யேவ தோயைகமய்ய꞉ |
ஸோ(அ)யம் க²ல்விந்த்³ரலோகம் கமலஜப⁴வனம் யோக³ஸித்³தீ⁴ஶ்ச ஹ்ருத்³யா꞉
நாகாங்க்ஷத்யேததா³ஸ்தாம் ஸ்வயமனுபதிதே மோக்ஷஸௌக்²யே(அ)ப்யனீஹ꞉ || 95-4 ||

கிருஷ்ணா, நான் சொல்வதை அனுபவித்தால் தான் புரியும். உன் மீது பரிபூர்ண பக்தி நிறைந்த மனம் கொண்டவனுக்கு எங்கும் எதிலும் நீ தான் தெரிவாய். ஆஸா பாசங்களுக்கு அவன் மனதில் இடமே இல்லையே. ஆழ்கடலில் சுகமாக நீந்தும் மீனுக்கு எங்கும் அதைச் சுற்றி நீர் தானே. இப்படி உன்னை சரணடைந்த பக்தன் '' இந்திரலோகம், சந்திரலோகம், பிரம்மலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்'' என்று சொல்வதில் என்ன ஆச்சர்யம்? மந்திரமும் தந்திரமும், யோகமும் வேண்டாம், தேகமும் வேண்டாம் என்பதில் என்ன வியப்பு? பாதம் ஹல்வா ருசித்து உண்பவ னுக்கு கடலை மிட்டாய் எதற்கு?

त्वद्भक्तो बाध्यमानोऽपि च विषयरसैरिन्द्रियाशान्तिहेतो-
र्भक्त्यैवाक्रम्यमाणै: पुनरपि खलु तैर्दुर्बलैर्नाभिजय्य: ।
सप्तार्चिर्दीपितार्चिर्दहति किल यथा भूरिदारुप्रपञ्चं
त्वद्भक्त्योघे तथैव प्रदहति दुरितं दुर्मद: क्वेन्द्रियाणाम् ॥५॥

tvadbhaktO baadhyamaanO(a)pi cha viShayarasairindriyaashaantihetOH
bhaktyaivaakramyamaaNaiH punarapi khalu tairdurbalairnaabhijayyaH |
saptaarchirdiipitaarchirdahati kila yathaa bhuuridaaru prapa~nchaM
tvadbhaktyOghe tathaiva pradahati duritaM durmadaH kvendriyaaNaam || 5

த்வத்³ப⁴க்தோ பா³த்⁴யமானோ(அ)பி ச விஷயரஸைரிந்த்³ரியாஶாந்திஹேதோ-
ர்ப⁴க்த்யைவாக்ரம்யமாணை꞉ புனரபி க²லு தைர்து³ர்ப³லைர்னாபி⁴ஜய்ய꞉ |
ஸப்தார்சிர்தீ³பிதார்சிர்த³ஹதி கில யதா² பூ⁴ரிதா³ருப்ரபஞ்சம்
த்வத்³ப⁴க்த்யௌகே⁴ ததை²வ ப்ரத³ஹதி து³ரிதம் து³ர்மத³꞉ க்வேந்த்³ரியாணாம் || 95-5 ||

நாராயணா, நல்லதும் கெட்டதும் , நன்மையையும் தீமையும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல, எதன் கை ஓங்குகிறதோ மனம் அதற்கு அடிமையாகிவிடும். ஐம்புலன்களின் ஈர்ப்புக்கு வசமாகியவன் மீண்டு வர சிரமப்படுவான். எதிர் நீச்சல் போட்டு வெள்ளத்தில் நீந்தி வரவேண்டும். உன் பக்தியில் திளைத்தவனை புலன்கள் தீண்டாது. ஒரு சிறு நெருப்புப் பொறி, மலைபோல் குவிந்த மரங்களை எளிதில் கொளுத்தி சாம்பலாக்கிவிடும். அப்படிதான் உன்மேல் கொண்ட பக்தி யால் ஐம்புலன்களின் ஈர்ப்பும், அவற்றால் விளையும் பாபங்களும் காணாமல் போகும். நித்யம் அநித்யத்தை விழுங்கும்.

चित्तार्द्रीभावमुच्चैर्वपुषि च पुलकं हर्षवाष्पं च हित्वा
चित्तं शुद्ध्येत्कथं वा किमु बहुतपसा विद्यया वीतभक्ते: ।
त्वद्गाथास्वादसिद्धाञ्जनसततमरीमृज्यमानोऽयमात्मा
चक्षुर्वत्तत्त्वसूक्ष्मं भजति न तु तथाऽभ्यस्तया तर्ककोट्या॥६॥

chittaardriibhaava muchchairvapuShi cha pulakaM harShabaaShpaM cha hitvaa
chittaM shudhyetkathaM vaa kimu bahutapasaa vidyayaa viitabhakteH |
tvadgaathaa svaada siddhaa~njana satata mariimR^ijyamaanO(a)yamaatmaa
chakshurvattattvasuukshmaM bhajati na tu tathaa(a)bhyastayaa tarkakOTyaa || 6

சித்தார்த்³ரீபா⁴வமுச்சைர்வபுஷி ச புலகம் ஹர்ஷபா³ஷ்பம் ச ஹித்வா
சித்தம் ஶுத்³த்⁴யேத்கத²ம் வா கிமு ப³ஹுதபஸா வித்³யயா வீதப⁴க்தே꞉ |
த்வத்³கா³தா²ஸ்வாத³ஸித்³தா⁴ஞ்ஜனஸததமரீம்ருஜ்யமானோ(அ)யமாத்மா
சக்ஷுர்வத்தத்த்வஸூக்ஷ்மம் ப⁴ஜதி ந து ததா²ப்⁴யஸ்தயா தர்ககோட்யா || 95-6 ||

ஆஹா, கிருஷ்ணா, உன்னை நினைக்கையிலேயே என் அங்கம் பரவசமடைகிறதே, மயிர்க் கூச்செறிகிறதே, நெஞ்சு பாகாய் உருகுகிறதே, ஆனந்த கண்ணீர் பிரவாஹம் கண்ணை மறைக்கிறதே.. அப்புறம் உன் நாமத்தைச் சொன்னால் எப்படி இருக்கும் நினைத்துப் பார்? எனை மறந்து நீயாக கலந்து, நான் பக்தியோடு பாடினால்?? நான் இல்லையே அங்கே அப்போது.. இருப்பது நீ ஒன்று தானே. இந்த அனுபவம் பெறாமல் எப்படி பக்தி பூரணமாகும்? வெறும் புத்தகங்களை படித்து நெட்டுரு போட்டால் கிடைக்குமா இது? பிருந்தாவன கோபிகள் எங்கே எந்த பள்ளியில், எவ்வளவு வகுப்புகள் படித்து கல்வி கற்றவர்கள்? உன்னை அடைய ஐம்புலன்களும் மனமும் சேர்ந்து உன்னை நாடினால் அதுவல்லவோ கல்லூரி, பல்கலாசாலை, பட்டம் விருது..

ध्यानं ते शीलयेयं समतनुसुखबद्धासनो नासिकाग्र-
न्यस्ताक्ष: पूरकाद्यैर्जितपवनपथश्चित्तपद्मं त्ववाञ्चम्।
ऊर्ध्वाग्रं भावयित्वा रविविधुशिखिन: संविचिन्त्योपरिष्टात्
तत्रस्थं भावये त्वां सजलजलधरश्यामलं कोमलाङ्गम् ॥७॥

dhyaanaM te shiilayeyaM samatanu sukha baddhaasanO naasikaagra
nyastaakshaH puurakaadyairjitapavanapatha shchittapadmaM tvavaa~ncham |
uurdhvaagraM bhaavayitvaa ravividhushikhinaH sanvichintyOpariShTaat
tatrasthaM bhaavaye tvaaM sajalajaladhara shyaamalaM kOmalaangam || 7

த்⁴யானம் தே ஶீலயேயம் ஸமதனுஸுக²ப³த்³தா⁴ஸனோ நாஸிகாக்³ர-
ந்யஸ்தாக்ஷ꞉ பூரகாத்³யைர்ஜிதபவனபத²ஶ்சித்தபத்³மம் த்வவாஞ்சம் |
ஊர்த்⁴வாக்³ரம் பா⁴வயித்வா ரவிவிது⁴ஶிகி²ன꞉ ஸம்விசிந்த்யோபரிஷ்டாத்
தத்ரஸ்த²ம் பா⁴வயே த்வாம் ஸஜலஜலத⁴ரஶ்யாமலம் கோமலாங்க³ம் || 95-7 ||

குருவாயூரா , எனக்குத் தெரிந்த தியானத்துக்கு உகந்த யோகத்தை சொல்கிறேன் கேள்.
சுத்தமான தனிமையான ஒரு இடத்தில், சௌகர்யமாக, சுகாசனமாக நிமிர்ந்து L மாதிரி அமர்ந்து கொள்வேன். மூக்கு நுனி மேல் கண் பார்வையை செலுத்துவேன். நிதானமாக மூச்சை உள்ளி ழுப்பேன். இதயத்தில் தாமரை மொட்டு மேலெழும். அதோ மேலே மேலே மேலே சூரியன், சந்திரன், அக்னி, அதற்கும் மேலே கரு நீல பரவெளி, சூல் கொண்ட மழை மேகம் போல்.. அட நீ தான் அந்த கார்மேக வண்ணன், கண்ணனா? கண்டுபிடித்துவிட்டேன்!

आनीलश्लक्ष्णकेशं ज्वलितमकरसत्कुण्डलं मन्दहास-
स्यन्दार्द्रं कौस्तुभश्रीपरिगतवनमालोरुहाराभिरामम् ।
श्रीवत्साङ्कं सुबाहुं मृदुलसदुदरं काञ्चनच्छायचेलं
चारुस्निग्धोरुमम्भोरुहललितपदं भावयेऽहं भवन्तम् ॥८॥

aaniilashlakshNa keshaM jvalitamakarasatkuNDalaM mandahaasa
syandaadraM kaustubhashrii parigata vanamaalOruhaaraabhiraamam |
shriivatsaankaM subaahuM mR^idulasadudaraM kaanchanachChaayachelaM
chaarusnigdhOrumambhOruhalalita padaM bhaavaye(a)haM bhavantam || 8

ஆனீலஶ்லக்ஷ்ணகேஶம் ஜ்வலிதமகரஸத்குண்ட³லம் மந்த³ஹாஸ-
ஸ்யந்தா³ர்த்³ரம் கௌஸ்துப⁴ஶ்ரீபரிக³தவனமாலோருஹாராபி⁴ராமம் |
ஶ்ரீவத்ஸாங்கம் ஸுபா³ஹும் ம்ருது³லஸது³த³ரம் காஞ்சனச்சா²யசேலம்
சாருஸ்னிக்³தோ⁴ருமம்போ⁴ருஹலலிதபத³ம் பா⁴வயே(அ)ஹம் ப⁴வந்தம் || 95-8 ||

அப்பப்பா, குருவாயூரா , பரந்த நீண்ட எங்கும் நிறைந்த உன் கருநீல நிறம், ஆகாயம் போல் காண்கிறது.அதன் மேல் அலை அலையாக உருண்டு சுருண்ட திரண்ட கேசம், மகர குண்டலங்கள் செவிகளில் ஒளிவீச, மார்பை மறைக்கும் வனமாலைகள் மேல் கௌஸ்துபம், கருப்புக்கு எடுப்பாக வெள்ளை வெளேரென்று கோபிகள் கோர்த்து தொடுத்து அணிவித்த முத்துச்சரம், ஸ்ரீவத்ஸ அடையாளம், குழைந்த, இளைத்த , தோதான, உதரம், அதைச் சுற்றி நீ அணிந்திருக்கும் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற பரிசுத்தமான பீதாம்பர வஸ்திரம், பலம் மிக்க பிரபஞ்சத்தையே தாங்கும் சக்தி வாய்ந்த தொடைகள், அப்புறம் என் நெஞ்சில் பதிந்து மேற்கொண்டு எதையும் பார்க்க முடியாமல் நிலைத்த கண்களில் பதிந்த உன் தாமரைத் திருப்பாதங்கள்... ஆஹா, பட்டத்ரி குருவாயூரப்பன் முன்பே அமர்ந்து மனக் கண்ணால் கண்ட எப்படிப்பட்ட திவ்ய விஸ்வ ரூப தர்சனம் பெற்று விவரிக்கிறார்...

सर्वाङ्गेष्वङ्ग रङ्गत्कुतुकमिति मुहुर्धारयन्नीश चित्तं
तत्राप्येकत्र युञ्जे वदनसरसिजे सुन्दरे मन्दहासे
तत्रालीनं तु चेत: परमसुखचिदद्वैतरूपे वितन्व-
न्नन्यन्नो चिन्तयेयं मुहुरिति समुपारूढयोगो भवेयम् ॥९॥

sarvaangeShvanga rangatkutukamitimuhurdhaarayanniisha chittaM
tatraapyekatra yu~nje vadanasarasije sundare mandahaase |
tatraaliinaM tu chetaH paramasukhachidadvaitaruupe vitanvan
anyannO chintayeyaM muhuriti samupaaruuDhayOgO bhaveyam || 9

ஸர்வாங்கே³ஷ்வங்க³ ரங்க³த்குதுகமிதிமுஹுர்தா⁴ரயன்னீஶ சித்தம்
தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வத³னஸரஸிஜே ஸுந்த³ரே மந்த³ஹாஸே |
தத்ராலீனந்து சேத꞉ பரமஸுக²சித³த்³வைதரூபே விதன்வ-
ந்னந்யன்னோ சிந்தயேயம் முஹுரிதி ஸமுபாரூட⁴யோகோ³ ப⁴வேயம் || 95-9 |

கிருஷ்ணா, நான் உன்னை விடமாட்டேன். விட உத்தேசமில்லை. விடாமல் தொடர்ந்து முழு கவனத்தோடு ஆர்வத்தோடு உன் அங்க லாவண்யங்களை தரிசித்து, ரசித்து அனுபவிப்பேன். கண்ணுக்கு இனியவன் என்பதால் தான் நீ கண்ணன், கண்ணை நிறைப்பவன், என்று பெயர் கொண்டாயோ? உன் முகமலரை விட்டு என் பார்வை அசையமுடியாமல் காந்தத்தால் கவரப்பட்டு விட்டதே. அதன் விஷம, புன் சிரிப்பில் ஈரேழு புவனமும் அசைந்தாடுதே, ஆடாமல் அசையாமல் என் மனம் நிலை கொண்டுவிட்டதே. ஆனந்தம் பரமானந்தம் , ப்ரம்மானந்தம் என்பது தெரியாமலேயே புரிந்துவிட்டது. நீயின்றி நான் இல்லை கண்ணா.

इत्थं त्वद्ध्यानयोगे सति पुनरणिमाद्यष्टसंसिद्धयस्ता:
दूरश्रुत्यादयोऽपि ह्यहमहमिकया सम्पतेयुर्मुरारे ।
त्वत्सम्प्राप्तौ विलम्बावहमखिलमिदं नाद्रिये कामयेऽहं
त्वामेवानन्दपूर्णं पवनपुरपते पाहि मां सर्वतापात् ॥१०॥

itthaM tvaddhyaanayOge sati punaraNimaadyaShTa samsiddhayastaaH
duurashrutyaadayO(a)pi hyahamahamikayaa sampateyurmuraare |
tvatsampraaptau vilambaavahamakhilamidaM naadriye kaamaye(a)haM
tvaamevaanandapuurNaM pavanapurapate paahi maaM sarvataapaat ||10

இத்த²ம் த்வத்³த்⁴யானயோகே³ ஸதி புனரணிமாத்³யஷ்டஸம்ஸித்³த⁴யஸ்தா꞉
தூ³ரஶ்ருத்யாத³யோ(அ)பி ஹ்யஹமஹமிகயா ஸம்பதேயுர்முராரே |
த்வத்ஸம்ப்ராப்தௌ விலம்பா³வஹமகி²லமித³ம் நாத்³ரியே காமயே(அ)ஹம்
த்வாமேவானந்த³பூர்ணம் பவனபுரபதே பாஹி மாம் ஸர்வதாபாத் || 95-10 ||

எண்டே குருவாயூரப்பா, கிருஷ்ணா முகுந்தா, முராரே - முரனை வதைத்த முராரி, என்ன ஆச்சர்யம் உன்னை தியானித்த பலனாக அஷ்ட சித்திகளும் என்னை வந்தடைந்து விட்டதே... நீங்கள் வேண்டாம் திரும்பி போகலாம், எனக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் உங்களுக்கு இடம் இல்லை என்றேன்.''என் நாராயண சேனை வேண்டுமா நான் வேண்டுமா?'' என்று கேட்டபோது அர்ஜுனன் யோசித்தா பதில் சொன்னான்? ''கண்ணா, நீ வாடா வேறெதுவும் வேண்டாம்'' என்று அவனைப்போல் நானும் உன்னை சிக்கென ப்பிடித்தேன் இனி நீ தப்புவதெப்படி? எனக்கு தொந்தரவு செய்யும் இந்த நோயை முதலில் அகற்று.