Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 57
57. தோழனாக வந்து தோளில் எமனை சுமந்தவன்

நாம் இதுவரை படித்ததில் ரெண்டு கொடியவர்கள் கம்சனால் கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பப்படாதவர்கள். ஒருவன் காளிங்கன். அவனை கிருஷ்ணன் கொல்லாமல் உயிர்ப்பிச்சை அளித்து நாடு கடத்திவிட்டான். மற்றவன் தேனுகாசுரன். பிருந்தாவனத்தின் அடர்ந்த உட்பகுதியில் தாளவனத்தில் கழுதை ரூபத்தில் இருந்தவன். அவன் பலராமன், கிருஷ்ணன் மற்ற கோபர்களை தாக்கியதன் காரணம் அவனது எல்லைக்குள் இவர்கள் நுழைந்து பழங்களை பறித்து தின்றதால் தான்.

''அண்ணா நீயே பலவான், பலராமன். இவனை எங்கு அனுப்பவேண்டுமோ அங்கே அனுப்பு'' என்று தேனுகாசுரன் முடிவை பலராமன் கையில் கொடுத்துவிட்டு பசுக்களை, நண்பர்களைக் காண சென்றவன் கிருஷ்ணன். இந்த சேதி எல்லாம் கம்சனுக்கு போய்க்கொண்டு தான் இருந்தது. இனி அவன் என்ன செய்யப்போகிறான் என்று நாராயணனுக்கும் நாராயண பட்டத்ரிக்கும் மட்டும் தெரியும். அவர் எப்படி சொல்கிறார் எங்கு இந்த தசகத்தில் பார்ப்போம்;

रामसख: क्वापि दिने कामद भगवन् गतो भवान् विपिनम् ।
सूनुभिरपि गोपानां धेनुभिरभिसंवृतो लसद्वेष: ॥१॥

raamasakha kvaapi dine kaamada bhagavan gatO bhavaan vipinam |
suunubhirapi gOpaanaaM dhenubhirabhisanvR^itO lasadveShaH ||1.

ராமஸக²꞉ க்வாபி தி³னே காமத³ ப⁴க³வன் க³தோ ப⁴வான்விபினம் |
ஸூனுபி⁴ரபி கோ³பானாம் தே⁴னுபி⁴ரபி⁴ஸம்வ்ருதோ லஸத்³வேஷ꞉ || 57-1 ||

''ரொம்ப நாள் ஆகிவிட்டதே. கம்சன் சும்மா இருக்கமாட்டானே! பிருந்தாவனத்திலிருந்து காளிங்கன் வெளியேற்றப்பட்டான். தேனுகாசுரன் என்பவன் கிருஷ்ணன் பலராமன் கூட்டத்தால் மாண்டான் என்ற சேதி வேறு மதுராவை அடைந்ததும் மீண்டும் யோசித்தான். அடுத்த நடவடிக்கை என்ன? ஒரு திட்டம் உருவாகியது இன்னொரு பலம் கொண்ட ராக்ஷஸன் புறப்பட்டான்.

பிருந்தாவனத்தில் வழக்கம்போல் கிருஷ்ணன் பலராமன் மற்ற யாதவ சிறுவர்கள் பசுக்களோடும் கன்றுகளோடும் காட்டுக்கு சென்றார்கள்.

सन्दर्शयन् बलाय स्वैरं वृन्दावनश्रियं विमलाम् ।
काण्डीरै: सह बालैर्भाण्डीरकमागमो वटं क्रीडन् ॥२॥

sandarshayan balaaya svairaM bR^indaavanashriyaM vimalaam |
kaaNDiiraiH saha baalai-rbhaaNDiirakamaagamO vaTaM kriiDan ||2

ஸந்த³ர்ஶயன்ப³லாய ஸ்வைரம் வ்ருந்தா³வனஶ்ரியம் விமலாம் |
காண்டீ³ரை꞉ ஸஹ பா³லைர்பா⁴ண்டீ³ரகமாக³மோ வடம் க்ரீட³ன் || 57-2 ||

பிருந்தாவனத்தின் அழகு கண்ணா, உன்னை எப்போதும் கவர்ந்தது அல்லவா. அதை வர்ணித் துக்கொண்டே நண்பர்களுக்கு இயற்கை அழகை காண்பித்து ரசித்தாய் அல்லவா? எல்லோரும் கையில் மாடுகளை விரட்டும் குச்சிகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பீர்களே. அங்கே ஒரு பெரிய ஆலமரம் உண்டே. அதன் பெயர் கூட பண்டீரகம் இல்லையா கிருஷ்ணா? . அதன் வளைந்த வேர் நீ அமரும் சிம்மாசனம் எப்போதும், இல்லையா குருவாயூரப்பா?

तावत्तावकनिधनस्पृहयालुर्गोपमूर्तिरदयालु: ।
दैत्य: प्रलम्बनामा प्रलम्बबाहुं भवन्तमापेदे ॥३॥

taavattaavaka nidhanaspR^ihayaaluH gOpamuurtiradayaaluH |
daityaH pralambanaamaa pralambabaahuM bhavantamaapede ||3

தாவத்தாவகனித⁴ன-ஸ்ப்ருஹயாலுர்கோ³பமூர்திரத³யாலு꞉ |
தை³த்ய꞉ ப்ரலம்ப³னாமா ப்ரலம்ப³பா³ஹும் ப⁴வந்தமாபேதே³ || 57-3 ||

இந்த சமயத்தில் தான் கம்சனால் அனுப்பப்பட்ட அடுத்த ராக்ஷஸன் பிரலம்பாசுரன் பிருந்தாவனத்தில் உனக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தான். கருணையற்ற கொடூர ராக்ஷஸன் அவன். ரொம்ப சாமர்த்தியமாக அவன் உனது நண்பர்களின் ஒருவனைப் போலவே உருவம் கொண்டு உன் நண்பர்களோடு கலந்து விளையாட்டிலும் ஈடுபட்டான். அவன் கைகள் நீண்டு கால் முட்டியை தொட்டது.

जानन्नप्यविजानन्निव तेन समं निबद्धसौहार्द: ।
वटनिकटे पटुपशुपव्याबद्धं द्वन्द्वयुद्धमारब्धा: ॥४॥

jaanannapyavijaananniva tena samaM nibaddhasauhaardaH |
vaTanikaTe paTupashupavyaabaddhaM dvandvayuddhamaarabdhaaH ||4

ஜானந்னப்யவிஜானந்னிவ தேன ஸமம் நிப³த்³த⁴ஸௌஹார்த³꞉ |
வடனிகடே படுபஶுபவ்யாப³த்³த⁴ம் த்³வந்த்³வயுத்³த⁴மாரப்³தா⁴꞉ || 57-4 ||

உன் நண்பர்களை உனக்கு தெரியும் என்பதை விட கிருஷ்ணா, நீ உலகில் எல்லாவற்றையும், எல்லோரையும் அறிந்தவன் என்பதால் ஒரு அசுரன் உன் நண்பர்களில் ஒருவனாக உன்னோடு விளையாடுவது போல் வந்து சரியான நேரத்தில் உன்னைக் கொல்ல முயற்சி செய்வது உனக்கு தெரியாமல் போகுமா? நீ மாயாஜாலக்காரன் அல்லவா? அவனை அறிந்துகொண்டதை வெளியே காட்டிக்கொள்ளவே இல்லை. அசுரனுக்கு தனது வேஷம் அறியப்படவில்லை என்ற சந்தோஷம்!

ஓடிப்பிடித்து ஒளிந்து கொண்டு வழக்கம்போல் சிறுவர்கள் விளையாடினீர்கள். ரெண்டு கட்சியாக பிரிந்து கொண்டு விளையாட்டாக த்வந்த யுத்தம், மல்யுத்தம் செய்தீர்கள்.

गोपान् विभज्य तन्वन् सङ्घं बलभद्रकं भवत्कमपि ।
त्वद्बलभीरुं दैत्यं त्वद्बलगतमन्वमन्यथा भगवन् ॥५॥

gOpaan vibhajya tanvan sanghaM balabhadrakaM bhavatkamapi |
tvad balabhiitaM daityaM tvadbalagata manvamanyathaa bhagavan ||5

கோ³பான்விப⁴ஜ்ய தன்வன்ஸங்க⁴ம் ப³லப⁴த்³ரகம் ப⁴வத்கமபி |
த்வத்³ப³லபீ⁴தம் தை³த்யம் த்வத்³ப³லக³தமன்வமன்யதா² ப⁴க³வன் || 57-5 ||
[** த்வத்³ப³லபீ⁴ரும் **]

நீ எவ்வளவு சாமர்த்தியக்காரன் பார். இரண்டு கட்சிகளில் நீ ஒருபக்கமும் பலராமன் மறு பக்கமும் தலைவர்கள். பிரலம்பாசுரனை உன்தோழர்களில் ஒருவனாக உன் கோஷ்டியில் இணைத்துக் கொண்டாய். அவனை அருகில் வைத்துக் கொள்வது அவனைக் கண்காணிக்க உனக்கு சௌகர்யம் அல்லவா?

कल्पितविजेतृवहने समरे परयूथगं स्वदयिततरम् ।
श्रीदामानमधत्था: पराजितो भक्तदासतां प्रथयन् ॥६॥

kalpita vijetR^ivahane samare parayuuthagaM svadayitataram |
shriidaamaanamadhatthaaH paraajitO bhaktadaasataaM prathayan ||6

கல்பிதவிஜேத்ருவஹனே ஸமரே பரயூத²க³ம் ஸ்வத³யிததரம் |
ஶ்ரீதா³மானமத⁴த்தா²꞉ பராஜிதோ ப⁴க்ததா³ஸதாம் ப்ரத²யன் || 57-6 ||

இந்த போட்டியில் ஒரு கண்டிஷன். விதி முறை. என்னவென்றால், தோற்றவன் ஜெயித்தவனை தோளில் தூக்கிக் கொண்டு சுற்றி ஓடவேண்டும். நீ உன் பக்தர்களுக்கு அவ்வாறு தானே அடிமையாக அவர்களை சுமந்து துன்பத்திலிருந்து இன்பத்துக்கு தூக்கிச் செல்பவன். தோற்றுப் போன நீ ஸ்ரீ தாமன் எனும் ஒரு தோழனை, பலராமன் கோஷ்டியில் இருப்பவனை சுமந்துகொண்டு நீ ஓடினாய்.

एवं बहुषु विभूमन् बालेषु वहत्सु वाह्यमानेषु ।
रामविजित: प्रलम्बो जहार तं दूरतो भवद्भीत्या ॥७॥

evaM bahuShu vibhuuman baaleShu vahatsu vaahyamaaneShu |
raamavijitaH pralambO jahaara taM duuratO bhavadbhiityaa ||7

ஏவம் ப³ஹுஷு விபூ⁴மன் பா³லேஷு வஹத்ஸு வாஹ்யமானேஷு |
ராமவிஜித꞉ ப்ரலம்போ³ ஜஹார தம் தூ³ரதோ ப⁴வத்³பீ⁴த்யா || 57-7 ||

ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒவ்வொருவர் தோல்வி , வெற்றி என்று மாறி மாறி ஒருவரை ஒருவர் சுமந்துகொண்டு ஓடுவது வேடிக்கையாக இருந்து பொழுது போயிற்று. உன் கட்சியிலிருந்த பிரலம்பாசுரனை பலராமன் தோற்கடித்ததால் அசுரன் பலராமனை தோளில் சுமந்து ஓடவேண்டும். வெகுதூரம் ஓடினார்கள்.

त्वद्दूरं गमयन्तं तं दृष्ट्वा हलिनि विहितगरिमभरे ।
दैत्य: स्वरूपमागाद्यद्रूपात् स हि बलोऽपि चकितोऽभूत् ॥८॥

tvadduuraM gamayantaM tandR^iShTvaa halini vihita garimabhare |
daityaH svaruupamaagaadyadruupaat sa hi balO(a)pi chakitO(a)bhuut ||8

த்வத்³தூ³ரம் க³மயந்தம் தம் த்³ருஷ்ட்வா ஹலினி விஹிதக³ரிமப⁴ரே |
தை³த்ய꞉ ஸ்வரூபமாகா³த்³யத்³ரூபாத்ஸ ஹி ப³லோ(அ)பி சகிதோ(அ)பூ⁴த் || 57-8 ||

பிரலம்பாசுரன் திட்டம் வேறு. தோற்பது போல் நடித்து பலராமனை வெகுதூரம் உன்னிடமிருந்து பிரித்து தூக்கிக்கொண்டு போய் ஓடி தனிமையில் யாரும் காணாத இடத்தில் அவனைக் கொல்வது.
பிரலம்பாசுரன் பட்டியலில் கிருஷ்ணன் பெயர் தவிர பலராமன் பெயரும் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று இருந்ததே. பலராமனிடம் கிருஷ்ணன் ஏற்கனவே ரஹஸ்யமாக பிரலம்பாசுரனை அடையாளம் காட்டி உஷார் படுத்தி இருந்ததால் பலராமன் பிரலம்பாசுரனுடைய கழுத்தில் உட்கார்ந்ததும் தனது உடலின் கனத்தை அதிகமாக்கிக் கொண்டுவிட்டான். ''அடாடா இந்த குண்டுப்பையன் எவ்வளவு கனமாக இருக்கிறான் என்று அவனைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஓடினான் பிரலம்பாசுரன். சற்று தூரம் போனதும் அவனது கனம் தாங்கமுடியாமல் தனது ராக்ஷஸ ஸ்வயரூபத்தை எடுத்துக்கொண்டான் பிரலம்பாசுரன். அசுரனின் கோர ஸ்வருபத்தைக் கண்டு ஒரு கணம் பலராமன் திகைத்துவிட்டான்.

उच्चतया दैत्यतनोस्त्वन्मुखमालोक्य दूरतो राम: ।
विगतभयो दृढमुष्ट्या भृशदुष्टं सपदि पिष्टवानेनम् ॥९॥

uchchatayaa daityatanOstvanmukhaM aalOkya duuratO raamaH |
vigatabhayO dR^iDhamuShTyaa bhR^ishaduShTaM sapadi piShTavaanenam ||9

உச்சதயா தை³த்யதனோஸ்த்வன்முக²மாலோக்ய தூ³ரதோ ராம꞉ |
விக³தப⁴யோ த்³ருட⁴முஷ்ட்யா ப்⁴ருஶது³ஷ்டம் ஸபதி³ பிஷ்டவானேனம் || 57-9 ||

வாதபுரீசா, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உயரமாக இருந்த பிரலம்பாசுரன் தோளில் உட்கார்ந் திருந்த பலராமன் கண்ணுக்கு வெகுதூரத்தில் இருந்த நீ நன்றாக தெரிந்தாய். உன்னைப் பார்த்ததுமே பலராமன் அச்சம் நீங்கியது. நீ செய்த சைகை புரிந்தது. தைர்யம் மீண்டும் நெஞ்சில் குடிகொண்டது. கால்களால் அவன் கழுத்தை நெருக்கி, பலமாக அசுரனின் மண்டையை பலமாக கைகளால் அடித்து பிளந்தான்.

हत्वा दानववीरं प्राप्तं बलमालिलिङ्गिथ प्रेम्णा ।
तावन्मिलतोर्युवयो: शिरसि कृता पुष्पवृष्टिरमरगणै: ॥१०॥

hatvaa daanavaviiraM praaptaM balamaalilingitha peramNaa |
taavanmilatOryuvayOH shirasi kR^itaa puShpavR^iShTiramaragaNaiH ||10

ஹத்வா தா³னவவீரம் ப்ராப்தம் ப³லமாலிலிங்கி³த² ப்ரேம்ணா |
தாவன்மிலதோர்யுவயோ꞉ ஶிரஸி க்ருதா புஷ்பவ்ருஷ்டிரமரக³ணை꞉ || 57-10 ||

பலராமனின் வெற்றியில் நீ மகிழ்ந்தாய். ஆசையாக அவனை அணைத்துக் கொண்டாய். தேவர்கள் விண்ணிலிருந்து வழக்கம்போல் ரெடியாக கையில் மலர்கள் வைத்துக்கொண்டு மலர்மாரி பொழிந்தார்கள்.

आलम्बो भुवनानां प्रालम्बं निधनमेवमारचयन् ।
कालं विहाय सद्यो लोलम्बरुचे हरे हरे: क्लेशान् ॥११॥

aalambO bhuvanaanaaM praalambaM nidhanamevaM aarachayan |
kaalaM vihaaya sadyO lOlambaruche hare hareH kleshaan ||11

ஆலம்போ³ பு⁴வனானாம் ப்ராலம்ப³ம் நித⁴னமேவமாரசயன் |
காலம் விஹாய ஸத்³யோ லோலம்ப³ருசே ஹரே ஹரே꞉ க்லேஶான் || 57-11 ||

எண்டே குருவாயூரப்பா அப்புறம் நடந்ததை பலராமன் உன்னிடம் சொன்னதை நானும் அறிவேன் என்பதால் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். இருகால்களாலும் பிரலம்பாசுரன் கழுத்தை இறுக்கி நெரித்த பலராமன் அவன் தோளில் உட்கார்ந்தவாறே அவன் மண்டையை பலமாக தாக்கினான். கழுத்தை நெறுக்கியதால் மூச்சு விடமுடியாமல் திணறிய அசுரன் மண்டையில் அடியால் கண் இருண்டு , தலை சுற்றி கீழே விழுந்தபோது அவனுக்கு எப்போதோ மூச்சு நின்று போயிருந்தது. அவன் விழுவதற்கு முன்பே பலராமன் ஜாக்கிரதையாக தோளிலிருந்து கீழே தூர குதித்துவிட்டான். பாவம் உன் கையால் மோக்ஷம் பெற ப்ரலம்பாசுரனுக்கு பாக்யம் இல்லாவிட்டாலும் நீ தானே பலராமனும் கூட. என் மேலும் கருணை கொண்டு என் நோய் நீக்கி என்னை ரக்ஷிப்பாய்.