Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 27
27. அம்ருதம் எங்கே ?

दर्वासास्सुरवनिताप्तदिव्यमाल्यं
शक्राय स्वयमुपदाय तत्र भूय: ।
नागेन्द्रप्रतिमृदिते शशाप शक्रं
का क्षान्तिस्त्वदितरदेवतांशजानाम् ॥१॥

durvaasaassuravanitaapta divyamaalyaM
shakraaya svayamupadaaya tatra bhuuyaH |
naagendra pratimR^idite shashaapa shakraM
kaa kshaantistvaditara devataamsha jaanaam || 1

து³ர்வாஸாஸ்ஸுரவனிதா(ஆ)ப்ததி³வ்யமால்யம்
ஶக்ராய ஸ்வயமுபதா³ய தத்ர பூ⁴ய꞉ |
நாகே³ந்த்³ரப்ரதிம்ருதி³தே ஶஶாப ஶக்ரம்
கா க்ஷாந்திஸ்த்வதி³தரதே³வதாம்ஶஜானாம் || 27-1 ||

மூன்று முனிவர்களைக் கண்டால் எல்லோரும் ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்கள். அவ்வளவு பச்சைமிளகாய் மாதிரி சுள்ளென்று கோபம் கொண்ட அவர்கள் தான் துர்வாசர், விஸ்வாமித்ரர், ப்ருகு ரிஷி.. தவ ஸ்ரேஷ்டர்கள் என்பதால் சட்டென்று அவர்கள் கோபத்தில் கொடுக்கும் சாபங்களிலிருந்து எவராலும் மீள முடியாது.

இப்படிப்பட்ட துர்வாச ரிஷி ஒரு சமயம் ஒரு தெய்வீக மாலையை ஒரு அப்ஸரஸ் கொடுக்க அதைப் பெற்றுக்கொண்ட உடன் இந்திரனிடம் அதை அளிக்கிறார். அந்த மாலையை இந்திரனி ன் யானை ஐராவதம் பார்த்துவிட்டு தும்பிக்கையால் அதை கசக்கி எறிந்துவிட்டது.

தான் கொடுத்த தெய்வீக மாலையை இந்திரன் அஸ்ரத்தையாக வைத்து, அவன் யானை பிய்த்து எறிந்து விட்டது என்பது துர்வாசருக்கு ஞான திருஷ்டியில் தெரிந்தது. அவன் மீது கடும் கோபம் வந்தது. சாபமிட்டுவிட்டார் துர்வாசர். யாரா இருந்தாலும் ரிஷிகள் சாபத்திலிருந்து தப்ப முடியாது. அனுபவித்து தான் ஆகவேண்டும்.

शापेन प्रथितजरेऽथ निर्जरेन्द्रे
देवेष्वप्यसुरजितेषु निष्प्रभेषु ।
शर्वाद्या: कमलजमेत्य सर्वदेवा
निर्वाणप्रभव समं भवन्तमापु: ॥२॥

shaapena prathitajare(a)tha nirjarendre
deveShvapyasurajiteShu niShprabheShu |
sharvaadyaaH kamalajametya sarvadevaa
nirvaaNaprabhava samaM bhavantamaapuH || 2

ஶாபேன ப்ரதி²தஜரே(அ)த² நிர்ஜரேந்த்³ரே
தே³வேஷ்வப்யஸுரஜிதேஷு நிஷ்ப்ரபே⁴ஷு |
ஶர்வாத்³யா꞉ கமலஜமேத்ய ஸர்வதே³வா
நிர்வாணப்ரப⁴வ ஸமம் ப⁴வந்தமாபு꞉ || 27-2 ||

குருவாயூரப்பா, அப்பறம் என்ன நடந்தது தெரியுமா? சாபத்தால் இந்திரன் வயோதிகனானான். அசுரர்கள் எளிதில் அவனை வென்றார்கள். தேவர்களை இந்திரனால் பாதுகாக்க இயலவில்லை என்பதால் ப்ரம்மா சிவன் முதலானோர் விஷ்ணுவாகிய உன்னிடம் வந்தார்கள். எங்கு என்ன நடந்தாலும் கடைசியில் அதற்கு முடிவு காண்பவன் நீ தானே நாராயணா.. ஆனந்தம், சுகம், இன்பம் பெற ஒரே வழி உன்னை அடைவது தானே.

ब्रह्माद्यै: स्तुतमहिमा चिरं तदानीं
प्रादुष्षन् वरद पुर: परेण धाम्ना ।
हे देवा दितिजकुलैर्विधाय सन्धिं
पीयूषं परिमथतेति पर्यशास्त्वम् ॥३॥

brahmaadyaiH stuta mahimaa chiraM tadaaniiM
praaduShShan varada puraH pareNa dhaamnaa |
he devaa ditija kulairvidhaaya sandhiM
piiyuuShaM parimathateti paryashaastvam ||

ப்³ரஹ்மாத்³யை꞉ ஸ்துதமஹிமா சிரம் ததா³னீம்
ப்ராது³ஷ்ஷன்வரத³ புர꞉ பரேண தா⁴ம்னா |
ஹே தே³வா தி³திஜகுலைர்விதா⁴ய ஸந்தி⁴ம்
பீயூஷம் பரிமத²தேதி பர்யஶாஸ்த்வம் || 27-3 ||

கிருஷ்ணா, வரமருள்பவன் நீ. தேவர்கள் மொத்தமாக சேர்ந்து உன்னை ஸ்தோத்திரங்கள் செய்து கொண்டு வருவதைப் பார்த்தாய். அவர்கள் முன் தோன்றினாய். அவர்கள் குறை கேட்டாய். ஒரு யோசனை சொன்னாய்.

தேவர்களும் அசுரர்களும் சமரசமாக ஒற்றுமையோடு பாற்கடலை கடைந்து அம்ருதம் பெற்று இருவரும் பங்கிட்டு எல்லோருமே சக்தியுள்ளவர்களாகி அமரர்களாக இருப்பது ஒன்றே வழி. இதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அனுப்பிவிட்டாய். இதனால் என்ன விளைவு என்பதை நீ ஒருவனே அறிவாய்!!

सन्धानं कृतवति दानवै: सुरौघे
मन्थानं नयति मदेन मन्दराद्रिम् ।
भ्रष्टेऽस्मिन् बदरमिवोद्वहन् खगेन्द्रे
सद्यस्त्वं विनिहितवान् पय:पयोधौ ॥४॥

sandhaanaM kR^itavati daanavaiH suraughe
manthaanaM nayati madena mandaraadrim |
bhraShTe(a)smin badaramivOdvahan khagendre
sadyastvaM vinihitavaan payaHpayOdhau ||4

ஸந்தா⁴னம் க்ருதவதி தா³னவை꞉ ஸுரௌகே⁴
மந்தா²னம் நயதி மதே³ன மந்த³ராத்³ரிம் |
ப்⁴ரஷ்டே(அ)ஸ்மின்ப³த³ரமிவோத்³வஹன்க²கே³ந்த்³ரே
ஸத்³யஸ்த்வம் வினிஹிதவான் பய꞉பயோதௌ⁴ || 27-4 ||

தேவர்கள் சொன்ன யோசனை அசுரர்களுக்கு திருப்தி அளிக்க பாற்கடலைக் கடைந்து அம்ருதம் பெற ஒப்புக் கொண்டார்கள். கடைவதற்கு மத்து, கயிறு வேண்டுமே?
மந்திர மலையை மத்தாக கடைய முடிவெடுத்து, மந்திரமலை இடம் பெயர்க்க பட்டபோது அது சரிந்து விழ அப்போதும் நீ தான் உதவினாய். ஏதோ நெருப்புக்குச்சியை தூக்குவது போல், சுண்டைக்காயை எடுப்பது போல் மந்திரமலையை உன் கருடன் மேல் சுமந்து பாற்கடலில் இட்டாய்.

குருவாயூரப்பா நான் சொல்வது சரிதானே? என்று நம்பூதிரி கேட்டபோது புன்னகையோடு உண்ணி கிருஷ்ணன் ஆமாம் என்று தலையசைத்தான்.

आधाय द्रुतमथ वासुकिं वरत्रां
पाथोधौ विनिहितसर्वबीजजाले ।
प्रारब्धे मथनविधौ सुरासुरैस्तै-
र्व्याजात्त्वं भुजगमुखेऽकरोस्सुरारीन् ॥५

aadhaaya drutamatha vaasukiM varatraaM
paathOdhau vinihita sarva biijajaale |
praarabdhe mathanavidhau suraasuraistairvyaajaattvaM
bhujagamukhe(a)karOssuraariin || 5

ஆதா⁴ய த்³ருதமத² வாஸுகிம் வரத்ராம்
பாதோ²தௌ⁴ வினிஹிதஸர்வபீ³ஜஜாலே |
ப்ராரப்³தே⁴ மத²னவிதௌ⁴ ஸுராஸுரைஸ்தை-
ர்வ்யாஜாத்த்வம் பு⁴ஜக³முகே²(அ)கரோஸ்ஸுராரீன் || 27-5 ||

பாற்கடல் ரெடி. அதைக் கடைவதற்கு மந்திர மலை மத்தாக செய்தாகிவிட்டது. எப்படி கடைவது?. பலமான கயிற்றினால் தானே மத்தை சுற்றிக்கட்டி இழுத்துக் கடைய முடியும்? எங்கே இருக்கிறது அவ்வளவு பலமான கயிறு?. பல யோசனைகளுக்குப் பிறகு வாசுகியை கயிறாக மந்திர மலையைச் சுற்றிக் கட்டி அதன் தலைப்புறம் அசுரர்களும் வால் பக்கம் தேவர்களும் கடைந்தார்கள். எவ்வளவோ மூலிகைகள் மருந்துகள் பொக்கிஷங்கள் அடங்கிய பாற்கடல் அல்லவா? வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தியதும் உன் சமயோசிதம் தான் கிருஷ்ணா. ஹே , மாயா ஜாலக்காரா!

ब्धाद्रौ क्षुभितजलोदरे तदानीं
दुग्धाब्धौ गुरुतरभारतो निमग्ने ।
देवेषु व्यथिततमेषु तत्प्रियैषी
प्राणैषी: कमठतनुं कठोरपृष्ठाम् ॥६

kshubdhaadrau kshubhitajalOdare tadaaniiM
dugdhaabdhau gurutarabhaaratO nimagne |
deveShu vyathitatameShu tatpriyaiShii
praaNaiShiiH kamaThatanuM kaThOrapR^iShThaam || 6

க்ஷுப்³தா⁴த்³ரௌ க்ஷுபி⁴தஜலோத³ரே ததா³னீம்
து³க்³தா⁴ப்³தௌ⁴ கு³ருதரபா⁴ரதோ நிமக்³னே |
தே³வேஷு வ்யதி²ததமேஷு தத்ப்ரியைஷீ
ப்ராணைஷீ꞉ கமட²தனும் கடோ²ரப்ருஷ்டா²ம் || 27-6 ||

அசுரர்களும் தேவர்களும் கடையக் கடைய மந்திரமலை அதன் கன பரிமாணத்தால் பாற்கடலில் மூழ்க ஆரம்பித்தது. அதைத் தூக்கி நீரின் மேல் நிற்கும்படியாக நிலை நிறுத்துவது எப்படி??அப்போதும் நீ தான் உதவிக்கு வந்தாய். ஒரு பலமிக்க பெரிய கூர்மமாக அவதரித்து கடலில் பாய்ந்து மந்திரமலையின் அடிப்பாகத்தை உன் முதுகில் தாங்கி பிடித்து கடலில் மந்திரமலை மூழ்காமல் அசையாமல் நிற்க செய்தாய் குருவாயூரப்பா. உன் திட்டங்கள் ஈடிணையற்றவைஆயிற்றே.

वज्रातिस्थिरतरकर्परेण विष्णो
विस्तारात्परिगतलक्षयोजनेन ।
अम्भोधे: कुहरगतेन वर्ष्मणा त्वं
निर्मग्नं क्षितिधरनाथमुन्निनेथ ॥७॥

vajraatisthiratara karpareNa viShNO
vistaaraatparigata lakshayOjanena |
ambhOdheH kuharagatena varShmaNaa tvaM
nirmagnaM kshitidharanaathamunninetha || 7

வஜ்ராதிஸ்தி²ரதரகர்பரேண விஷ்ணோ
விஸ்தாராத்பரிக³தலக்ஷயோஜனேன |
அம்போ⁴தே⁴꞉ குஹரக³தேன வர்ஷ்மணா த்வம்
நிர்மக்³னம் க்ஷிதித⁴ரனாத²முன்னினேத² || 27-7 ||

குட்டி கிருஷ்ணா, நீ கூர்மமாய் (ஆமையாய்) கடலுக்கடியில் சென்று வஜ்ரத்தைக் காட்டிலும் பலமான உனது முதுகு ஓட்டில் மந்திர மலையைத் தங்கி அதை மேலே தூக்கிப் பிடித்து ஒரு லக்ஷம் யோஜனை காலம் சுமந்து கொண்டு நின்றாய். நீ அப்படி செய்யாதிருந்தால் மந்தர மலை ஆழம் காணமுடியாத பாற்கடலில் மூழ்கி அடியிலே எப்போதோ காணாமல் போயிருக்கும்.


उन्मग्ने झटिति तदा धराधरेन्द्रे
निर्मेथुर्दृढमिह सम्मदेन सर्वे ।
आविश्य द्वितयगणेऽपि सर्पराजे
वैवश्यं परिशमयन्नवीवृधस्तान् ॥८॥

unmagne jhaTiti tadaa dharaadharendre
nirmethurdR^iDhamihasammadena sarve |
aavishya dvitayagaNe(a)pi sarparaaje
vaivashyaM parishamayannaviivR^idhastaan || 8

உன்மக்³னே ஜ²டிதி ததா³ த⁴ராத⁴ரேந்த்³ரே
நிர்மேது²ர்த்³ருட⁴மிஹ ஸம்மதே³ன ஸர்வே |
ஆவிஶ்ய த்³விதயக³ணே(அ)பி ஸர்பராஜே
வைவஶ்யம் பரிஶமயன்னவீவ்ருத⁴ஸ்தான் || 27-8 ||

மூழ்கியிருந்த மந்திர மலை மேலே மெதுவாக பாற்கடலில் எழும்பி தலை தூக்கியதைப் பார்த்ததும் கவலையோடிருந்த தேவர்களும் அசுரர்களும் மகிழ்ந்தனர். ஹா ஹூ என்று சந்தோஷ கூச்சல் எங்கும் கேட்டது. கடைந்து கடைந்து தேவர்களும் அசுரர்களும், வாசுகியும் திணறிப் பெருமூச்சு விட்டு களைத்ததைப் பார்த்த கிருஷ்ணா, நீ அவர்கள் அத்தனை பேர்களுக்கும் உள்ளே நிற்பவனாகி அவர்களுக்கு புத்துணர்ச்சியும் , உற்சாகத்தையும் அளித்தாய். வாசுகிக்குள்ளும் புகுந்து அதற்கு கூடுதல் சக்தியை அளித்தாய். .குருவாயூரப்பா உனக்கு நமஸ்காரம்.

उद्दामभ्रमणजवोन्नमद्गिरीन्द्र-
न्यस्तैकस्थिरतरहस्तपङ्कजं त्वाम् ।
अभ्रान्ते विधिगिरिशादय: प्रमोदा-
दुद्भ्रान्ता नुनुवुरुपात्तपुष्पवर्षा: ॥९॥

uddaama bhramaNa javOnnamadgiriindra
nyastaikasthiratara hastapankajaM tvaam |
abhraante vidhigirishaadayaH pramOdaadudbhraantaa
nunuvurupaatta puShpavarShaaH || 9

உத்³தா³மப்⁴ரமணஜவோன்னமத்³கி³ரீந்த்³ர-
ந்யஸ்தைகஸ்தி²ரதரஹஸ்தபங்கஜம் த்வாம் |
அப்⁴ராந்தே விதி⁴கி³ரிஶாத³ய꞉ ப்ரமோதா³-
து³த்³ப்⁴ராந்தா நுனுவுருபாத்தபுஷ்பவர்ஷா꞉ || 27-9 ||

தேவர்களும் அசுரர்களும் உன்னால் புத்துணர்ச்சி பெற்று வேகமாக மந்திரமலையை வாசுகியால் கட்டி பாற்கடலை விடாமல் கடைந்தார்கள். பால் பொங்குவது போல் கடல் பொங்கியது. நீ எல்லாம் கவனித்துக் கொண்டிருப்பவன் அல்லவா? . உன் கரங்களால் அதை அதிகம் பொங்காமல் தடுத்தாய். ப்ரம்மா சிவன் முதலான தேவர்கள் விண்ணுலகத்தோர் அனைவரும் ஆச்சர்யத்தோடு பாற்கடலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மலர்கள் தூவி உன்னை மனமார போற்றினார்கள்.

தை³த்யௌகே⁴ பு⁴ஜக³முகா²னிலேன தப்தே
தேனைவ த்ரித³ஶகுலே(அ)பி கிஞ்சிதா³ர்தே |
காருண்யாத்தவ கில தே³வ வாரிவாஹா꞉
ப்ராவர்ஷன்னமரக³ணான்ன தை³த்யஸங்கா⁴ன் || 27-10 ||

दैत्यौघे भुजगमुखानिलेन तप्ते
तेनैव त्रिदशकुलेऽपि किञ्चिदार्ते ।
कारुण्यात्तव किल देव वारिवाहा:
प्रावर्षन्नमरगणान्न दैत्यसङ्घान् ॥१०॥

daityaughe bhujagamukhaanilena tapte
tenaiva tridashakule(a)pi ki~nchidaarte |
kaaruNyaattava kila deva vaarivaahaaH
praavarShannamaragaNaannadaityasanghaan || 10

தை³த்யௌகே⁴ பு⁴ஜக³முகா²னிலேன தப்தே
தேனைவ த்ரித³ஶகுலே(அ)பி கிஞ்சிதா³ர்தே |
காருண்யாத்தவ கில தே³வ வாரிவாஹா꞉
ப்ராவர்ஷன்னமரக³ணான்ன தை³த்யஸங்கா⁴ன் || 27-10

கிருஷ்ணா, யாரோ அமிர்தம் வேண்டியதற்காக, எல்லோரைவிட அதிகம் அவஸ்தை பட்டது, ஸ்ரமப்பட்டது, வாசுகி தான். உடல் கசங்கி, இரு பக்கங்களிலும் பல அசுரர்களால், தேவர்களாலும் வேகமாக இழுக்கப்பட்டு, மந்திரமலையால் நசுக்கப்பட்டு அதன் வாயிலிருந்து விஷப்புகை வெளிவர ஆரம்பித்தது. அது வெளியே எங்கும் பரவி ஸ்வாசம் எல்லோருக்கும் தடை பட்டது. முக்யமாக தேவர்களால் சமாளிக்க முடியாத நிலை. உன் கருணையால் அங்கு குளிர்ச்சியாக மழை பொழிந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தேவர்கள் பக்கம் பெய்த குளிர்ந்த மழை அசுரர்கள் பக்கம் பெய்ய வில்லை. நங்கநல்லூரில் இப்படித்தான் எப்போதாவது பாதி இடத்தில் வெயில் காயும் பாதி இடத்தில் சட்டென்று மழை பொழியும்.

उद्भ्राम्यद्बहुतिमिनक्रचक्रवाले
तत्राब्धौ चिरमथितेऽपि निर्विकारे ।
एकस्त्वं करयुगकृष्टसर्पराज:
संराजन् पवनपुरेश पाहि रोगात् ॥११॥

udbhraamyad bahu timi nakra chakravaale
tatraabdhau chiramathite(a)pi nirvikaare |
ekastvaM karayugakR^iShTa sarparaajaH
sanraajan pavanapuresha paahi rOgaat ||11

உத்³ப்⁴ராம்யத்³ப³ஹுதிமினக்ரசக்ரவாலே
தத்ராப்³தௌ⁴ சிரமதி²தே(அ)பி நிர்விகாரே |
ஏகஸ்த்வம் கரயுக³க்ருஷ்டஸர்பராஜ꞉
ஸம்ராஜன் பவனபுரேஶ பாஹி ரோகா³த் || 27-11

எங்கும் திமிங்கிலங்களும் முதலைகளும் பாற்கடல் கடையப்பட்டதால் கலங்கி அங்கும் இங்கும் உலவின. இவ்வளவு கடந்தும் ஏனோ பாற்கடலில் இருந்து ஒன்றும் வெளிவரவில்லை. கடைவது நிற்கவில்லை. இன்னும் வேகமாக தொடர்ந்தது. நீ பார்த்தாய் வாசுகியை ஊக்குவித்து பாற்கடலை இன்னும் ஆழமாக வேகமாக கடையச் செயதாய். இப்படியெல்லாம் எல்லோருக்கும் உதவிய இன்னும் உதவுகிற குருவாயூரப்பா, என்னையும் நோய் நீக்கி ரக்ஷிக்க வேண்டும்.